نبذة مختصرة : ஆய்வுச்சுருக்கம் இலங்கையின் 04, 05ஆம் தர மாணவர்களின் கணித செய்கைசார் செயற்பாடுகள் திருப்திகரமானதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக கணித செய்கைசார் வழுக்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்) அதிகமாக இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இதனால் கணித செயற்பாடுகளுடன் கூடிய மாணவர்களின் எதிர்கால இலக்கு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட கல்வி வலயத்தின் 15 பாடசாலைகளின் 314 மாணவர்களுக்கு, நான்கு பிரதான கணித செய்கைகளை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் கையளிக்கப்படுகிறது. இதில் வழுக்களில் அடையாளங் காணப்பட்ட 100 மாணவர்களின் வினாத்தாள்கள் தெரிவு செய்யப்பட்டு அம்மாணவர்களில் அடையாளங் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஆய்வு முன்னெடுக்கப் படுகிறது. “ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித செய்கையில் வழுக்கள் காணப்படுதலை அறிதல்” தொடர்பான பிரதான நோக்கத்துடன் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இனங்காணப்பட்ட மாணவர்களில் வழுக்களாக கவனயீனமான வழுக்கள், எழுமாறான வழுக்கள், அமைப்புசார் வழுக்கள், எண்ணக்கருசார் வழுக்கள் என அடையாளப்படுத்தப்பட்டாலும் அமைப்புசார் கணித வழுக்கள் அதிகமாக இனங்காணப்பட்டன. இவற்றுடன் நினைவுபடுத்தல் வழுக்கள், திசைப்படுத்தல் தொடர்பான வழுக்கள், அடையாளம் காணல் தொடர்பான வழுக்கள், பூச்சியம் தொடர்பான வழுக்கள் என்பனவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்படியான வழுக்கள் மாணவர்கள் கணித செயற்பாடுகளை முழுமையாகப் பாதிப்பதனை அடையாளப்படுத்தலாம். இப்படியான வழுக்கள் இனங்காணப்பட்டு பகுப்பாய்வின் ஊடாக அவை உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே இவ்வாறான வழுக்கள் ஏற்படும்போது அவற்றினை நிவர்த்தி செய்யும் வiயிலான கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தங்களது கறபித்தல் முறைகளை மாற்றிமைத்தல், நவீனமயப்படுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளில் ஈடுபடல், கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தி (கணினித்திரை, அபாகஸ், இலக்க அட்டைகள்) கற்பித்தல் மற்றும் தொடர்ந்தேர்ச்சியான மதிப்பிடல், மேற்பார்வை மாணவர்களின் கணித செய்கைசார் வழுக்களை குறைப்பதற்கான வழிவகைகளாக அமையும். Abstract The mathematical performance of grade 04 and 05 students in Sri Lanka is not found to be satisfactory. In particular, it can be observed that mathematical errors (addition, subtraction, multiplication, division) occur more frequently. This significantly ...
No Comments.